திட்டமிடப்பட்ட தாக்குதல்: அமெரிக்காவிற்கு மத்திய அரசு அழுத்தம் தர ஸ்டாலின் வலியுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியப் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாகச் சந்தித்து வருகின்ற நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. கோவிட்-19 பேரிடரிலிருந்து பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் நம் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

image


Advertisement

அந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு பெரும்பங்களித்து வரும் இந்தியப் பணியாளர்களுக்கு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும்.

அமெரிக்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் படிப்பினை முடித்து வேலை தேடுவதற்கும், பெற்றுள்ள கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், இந்த “விசா நிறுத்தம்” தடையை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

தமிழ்நாட்டில் உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மேற்கண்ட விசாக்களை நம்பித்தான், தங்களின் வாடிக்கையாளர்களின் முக்கிய திட்டச் செயல்பாடுகளை முடித்துக் கொடுக்க தங்களது பணியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புகின்றன. அதற்கும் அமெரிக்க அதிபரின் முடிவு, சிக்கலை ஏற்படுத்தி, இந்தியாவிற்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பையும் உருவாக்கியிருக்கிறது. 

image

இந்த விசாக்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தபோதே, மத்திய பா.ஜ.க அரசு, இந்தியாவின் நலன் கருதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அமெரிக்க அதிபருடன் தாம் போற்றிவரும் நட்பை பிரதமர் பயன்படுத்தி இருக்க வேண்டும். 

கோவிட்-19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இந்த காலகட்டத்தில் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement