JUST IN

Advertisement

டெல்லி சபாநாயகரை ஏமாற்றிய போலி பிளாஸ்மா நன்கொடையாளர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயாராக இருக்கிறேன் என டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலை ஏமாற்றியதாக 22 வயது நபர் கைது செய்யப்பட்டார்


Advertisement

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர் அப்துல் கரிம் என்ற ராகுல் தாக்கர் என்பதும் அவர் பிரஹலத்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை டெல்லி சபநாயகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Rioting Case: Delhi Assembly Speaker Ram Niwas Goel gets 6-month  imprisonment for house-trespass


Advertisement

அவர் அளித்த புகாரில், “எனது மாமனார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் நான் பிளாஸ்மா நன்கொடையாளரை தேடிக்கொண்டிருந்தேன். இதையடுத்து உதவி கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். இதைப்பார்த்து அந்த நபரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்திக்கொண்டதோடு சில நாட்களுக்கு முன்புதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தேன் எனவும் பிளாஸ்மா நன்கொடை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் மற்றொரு நன்கொடையாளர் கிடைத்ததால் அவரது உதவி அந்த நேரத்தில் தேவைப்படவில்லை. ஆனால் பின்னர், தனக்கு அறிமுகமான ஒருவருக்கு நன்கொடையாளர் தேவைப்பட்டபோது அந்த நபருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வருவதற்கு போக்குவரத்து செலவிற்காக 450 பணம் பறிமாற்றம் செய்ய சொன்னார். நோயாளி அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு வருவேன் என அவர் உறுதியளித்ததால் நான் பணம் பறிமாற்றம் செய்தேன்.

Fake plasma donor arrested for duping Delhi Assembly Speaker

ஆனால் பணம் வரவில்லை. மீண்டும் பணம் பறிமாற்றம் செய்யுங்கள் எனக் கூறினார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அவர், நோயாளியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பணம் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் தாக்கருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்கரை சனிக்கிழமை கைது செய்துவிட்டதாகவும் துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) மோனிகா பரத்வாஜ் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement