இங்கிலாந்து டூருக்கு தயாராகும் பாக். கிரிக்கெட் அணி: வீரர்கள் 3 பேருக்கு கொரோனா!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் 3 டெஸ்ட் மற்றூம், 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது.


Advertisement

image

இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக பாக் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Advertisement

தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் முதற்கட்ட சோதனை முடிந்த பின்னர் நாளை மறுநாள் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும் என்றும், அதிலும் நெகட்டிவ் என்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள். சில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் அணியில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்


Advertisement

ஒரே பெயரால் குழப்பம்: கொரோனா பாதித்தவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை!!

loading...

Advertisement

Advertisement

Advertisement