11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.


Advertisement

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

image


Advertisement

தமிழகத்தில் பல இடங்களில் நேற்று சற்றே தணிந்திருந்த வெயில் இன்று அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி திருத்தணி 105.08, புதுவை 103.6, நாகை 103.2, கடலூர் 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.8, வேலூர் மதுரை நுங்கம்பாக்கம் 101.1,மதுரை விமான நிலையம் 100.7, தூத்துக்குடி பரங்கிப்பேட்டை 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவாகியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement