நேற்று மட்டும் 15,413 பேர் பாதிப்பு; 306 பேர் உயிரிழப்பு: இந்தியாவை மிரட்டும் கொரோனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா காரணமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர்


Advertisement

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று மட்டும் கொரோனாவால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4,10,461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,27,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,69,451 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

image


Advertisement

இதுவரை 13,254 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

loading...

Advertisement

Advertisement

Advertisement