கொரோனா தொற்று அதிகரிப்பு: புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!!

Puducherry-Imposed-the-new-norms-to-prevent-the-spread-of-COVID-19

கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி,


Advertisement

1. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் படுக்கைகளை ஒதுக்கி தர அரசு உத்தரவு

 2. முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.200 அபராதம்


Advertisement

 

image

3. புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி (நாளை முதல் அமலாகிறது)


Advertisement

 4. உணவு விடுதிகளில் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம். இரவு 9 வரை பார்சல் வழங்க அனுமதி

 5. புதுச்சேரி கடற்கரைக்கு 10 நாட்களுக்கு யாரும் செல்ல அனுமதியில்லை.

image

மேற்கண்ட அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெரிய மார்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி அங்காடி இன்று முதல் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி உண்டு என்றும், நடைபயிற்சிக்காக அனுமதியளிக்கப்பட்ட கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அனுமதியை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 338 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.131 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement