ஊழியருக்கு கொரோனா - மூடப்பட்டது மகேந்திரகிரி இஸ்ரோ மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதையடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளது.


Advertisement

image

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டுக்கு தேவையான முக்கிய பொருட்கள், என்ஜின்கள், எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக இங்கு 600-க்கு மேற்பட்ட அரசு ஊழியர்களும், விஞ்ஞானிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


Advertisement

image

எந்த ஆயுதமும் வாங்கலாம் ! - பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில் இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நாகர்கோயில் இஸ்ரோ குடியிருப்பில் வசித்து வந்ததால் தற்போது அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இன்றும், நாளையும் விண்வெளி ஆராய்ச்சி மையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement