தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு

2-532-people-have-been-infected-with-coronavirus-in-Tamil-Nadu-overnight

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 59, 377 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 55.16% ஆக பதிவாகியுள்ளது.

image

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement