JUST IN

Advertisement

40 வருடங்களுக்கு பிறகு மூதாட்டியை குடும்பத்தோடு இணைத்த 'இண்டர்நெட்'!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

54 வயதில் காணாமல் போன பெண் ஒருவர் 94 வது வயதில் தன் குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்


Advertisement

1980-ம் வருடம் மத்தியப் பிரதேச மாநிலம், டமோ மாவட்டத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய லாரியில் சென்றுள்ளார். அப்போது சாலையில் பரிதாபகரமான நிலையில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பார்த்துள்ளார். தேனீக்களால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த பெண்ணால் சரியாக பேசவும் முடியவில்லை. பரிதாபப்பட்ட லாரி ஓட்டுநர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

image


Advertisement

இது குறித்து தெரிவித்துள்ள அந்த லாரி ஓட்டுநரின் மகன் இஸ்ரார் கான், '' அப்போது நான் சிறுவன். அவர் எங்களுடன் தங்கவைக்கப்பட்டார். அவரை நாங்கள் அச்சான் மாசி என்று அழைப்போம். அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மராத்தியில் ஏதோ முணுமுணுப்பார். எங்களுக்கு எதுவும் புரியாது. அவ்வப்போது அவரது குடும்பம் குறித்து கேட்போம். அவர் எதுவும் கூறமாட்டார் ” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரார் கான் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதியுள்ளார். ஆனால் அந்த மூதாட்டியை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது மூதாட்டி பர்சபூர் என்ற பெயரைக் கூறியுள்ளார். உடனடியாக அந்த பெயரை கூகுளில் தட்டிய இஸ்ரார் அது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு இடம் என்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக பர்சபூரில் உள்ள ஒரு கடைக்காரரை இணையம் வழியாக பிடித்த இஸ்ரார் அந்த மூதாட்டி குறித்து கூறியுள்ளார்.

image

அந்த மூதாட்டியின் வீடியோவை பெற்றுக்கொண்ட கடைக்காரர் தங்கள் ஊர் சுற்றுவட்டார வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். மூதாட்டியின் வீடியோவைப் பார்த்த நாக்பூரைச் சேர்ந்த ப்ரித்வி என்பவர் அவர் தன்னுடைய பாட்டி என கூறியுள்ளார். ஊரடங்கு காரணமாக காத்திருந்த ப்ரித்வி தற்போது தன் பாட்டியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ப்ரித்வி, என் பாட்டி மனதளவில் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சைக்காக 1979-ம் ஆண்டு என் அப்பா, பாட்டியை நாக்பூருக்கு அழைத்துச் சென்றார்.


Advertisement

அங்கிருந்து அவர் காணாமல் போனார். அவரை என் அப்பா ஒரு வருடங்களுக்கு மேலாக தேடி அலைந்தார். அவரும் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். பாட்டி தற்போது வீட்டுக்கு வந்துள்ளார். அப்பா இறப்பதற்கு முன்னதாக வந்திருந்தால் இன்னமும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். 94 வயதிலும் என் பாட்டி ஆரோக்யமாக இருக்கிறார். என் பாட்டியை மீட்டு இத்தனை காலம் கவனித்து வந்த கான் குடும்பத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement