JUST IN

Advertisement

“கருணாநிதி வெற்றி பெற பம்பரம் போல பணியாற்றியவர்”-பலராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவை சேர்ந்த பலராமன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது “ வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் கொரோனா நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

image


Advertisement


திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர் போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி.

image


கழகத் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச்செயலாளரையும் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றிய பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.


Advertisement

image

கருணாநிதி மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டும் அவர் கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர். இன்றைக்கு கழகம் அவரை இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது.திரு. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement