“யோகாவின் தேவையை நாடு இப்போது அதிகமாகவே உணர்ந்துள்ளது”-பிரதமர் மோடி பேச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றினார்.


Advertisement

உலகம் முழுவதும் இன்று 6-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது “ யோகா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவு, நாடு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் அதிகமாகவே உணர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இது அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் மக்கள் யோகா கற்று கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். உங்கள் வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக்கப் பழகுங்கள். யோகா உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் தருகிறது.யோகாவிற்கு ஜாதி மதம் பேதமில்லை. இந்தாண்டு குடும்பத்துடன் யோகா செய்யுங்கள்” என்று பேசினார்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement