இருசக்கர வாகன விற்பனை மேலாளரைக் கொலை செய்து விட்டு, 22 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனியில் உள்ள பிரபல இருசக்கர வாகன விற்பனை மையத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் அருண்குமார். தேனி அருகே உள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த இவர் நேற்று அங்குள்ள ஒரு வங்கியில் 22 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வந்த நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருண் அங்கிருந்து சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை எடுத்துக்கொண்டு வெகுநேரமாகியும் அருண் வராததால், சந்தேகத்தின் அடிப்படையில் வாகன மையத்தின் உரிமையாளர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் அருணின் செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முயன்றனர்.
அப்போது அவரின் செல்போன் டவரானது தேனி புறவழிச் சாலை பகுதியிலுள்ள மலையடிவாரத்தில் இருப்பது போலக் காட்டியது. உடனடியாக மலையடிவாரத்திற்குக் காவல் துறையினர் விரைந்தனர். அங்குச் சென்று பார்த்தபோது அருண் குமார் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்ததும் அவரிடம் இருந்த 22 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி