ஹைதராபாத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையிலிருந்து காணாமல்போன நபர் பிணவறையில் அடையாளம் காணப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் நரேந்தர் சிங். இவருக்குக் கடந்த மே மாதம் மூச்சுவிடுவதில் சிரமம், சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பின்னர் மே 30ஆம் தேதியன்று காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து 31ஆம் தேதியன்று அவரைக் காணவில்லை. நரேந்தர் சிங்கை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரைக் காணவில்லை எனக் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மருத்துவமனை நிர்வாகம் உண்மைகளை மறைப்பதாக நரேந்தர் சிங் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் 21 நாட்களுக்குப் பின்னர் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நரேந்தர் சிங் உடல் கண்டறியப்பட்டது. அவரது உடலை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?