தாய்க்கும் தந்தைக்கும் கொரோனா - தவித்த 6 மாத குழந்தைக்குப் பாலூட்டும் பெண்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆதரவின்றி தவித்த குழந்தையைப் பெண் ஒருவர் தற்காலிகமாகத் தத்தெடுத்தார்.


Advertisement

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஹரியானாவில் செவிலியர்களாக பணியாற்றி வந்தனர். இந்தத் தம்பதிக்கு 2 வயது மகள் மற்றும் 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் ஹரியானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கடந்த ஜூன் 9ஆம் தேதி கேரளாவின் எர்ணாகுளம் வந்தார். வந்த சில தினங்களில் அவருக்குக் காய்ச்சல், சளி உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 வயது மகளைத் தனது தாயாரிடம் அப்பெண் ஒப்படைத்தார். பாட்டியின் வீட்டில் அந்தச் சிறுமி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Advertisement

image

அதேசமயம் 6 மாத குழந்தைக்கு கொரோனா இல்லை எனச் சோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்ள யாரேனும் தன்னார்வலர் வேண்டும் என எர்ணாகுளம் குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு கொச்சியைச் சேர்ந்த மருத்துவர் மேரி அனிதா (48) என்ற பெண் குழந்தையைப் பராமரிக்க முன்வந்தார். 6 மாத குழந்தை என்பதால் முழு நேரமும் கவனித்துக்கொள்ள வேண்டும் என யாரும் முன்வராத நிலையில், அப்பெண் முன்வந்தது அனைவரையும் பாராட்டச் செய்துள்ளது.

தாய்-தந்தைக்காக சில நாட்கள் அழுத அந்தக் குழந்தை தற்போது அனிதாவிடம் நன்றாகப் பழகிவிட்டது. அவர் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் குழந்தைக்குக் கொடுக்கிறார். அத்துடன் குழந்தையுடன் பொம்மைகளை வைத்து விளையாடுவது, குழந்தையின் பெற்றோருடன் வீடியோ கால் மூலம் பேசுவது என மற்றொரு தாயாக அனிதா மாறியிருக்கிறார்.


Advertisement

கொரோனா பரவலுக்கு இடையே ரயிலை ஓட்டிய பெண் ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்

loading...

Advertisement

Advertisement

Advertisement