நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஒரு வித்தியாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய். வரும் ஜுன் 22 ஆம் தேதி இவரது பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் ஆண்டு தோறும் மிக விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆனால் கொரோனா தொற்று பரவலை மனதில் வைத்து விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகிறது. இருப்பினும் மதுரையில் விஜய் ரசிகர்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்களை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ரசிகரால் உருவாக்கப்பட்ட விஜய் பிறந்தநாள் தொடர்பான போஸ்டர் ஒன்றும் ஹேஷ்டேக் உடன் வைரலானது.
Advance Birthday wishes to our beloved #Thalapathy @actorvijay sir.. Here is the special poster for #ThalapathyVijay Birthday from our #7ScreenStudio family ?? pic.twitter.com/qKSfWFYo2u— Lalitkumar (@Lalit_SevenScr) June 18, 2020
இந்நிலையில் இப்போது விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் சிலை வடிவிலான விஜய் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் விஜய்யின் புகைப்படம் சிலை வடிவில் இருப்பது போலவும் அச்சிலையைச் பிகில் விஜய் , மெர்சல் விஜய், துப்பாக்கி விஜய் என அனைவரும் சேர்ந்து செதுக்குவதைப்போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதுவித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இதனை விஜய்யின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் விஜய்யின் பிறந்தாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து மிக முக்கியமான அப்டேட் வராலாம் என எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?