JUST IN

Advertisement

"21 ஆண்டுகள் கடந்துவிட்டதா? நம்ப முடியவில்லை" - நினைவில் மூழ்கிய ரிக்கி பாண்டிங் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தின்போது அணிந்திருந்த ஜெர்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்தார். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதியன. பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் காரணமாக, இறுதிப் போட்டியில் சொற்ப ரன்களை மட்டுமே குவித்தது. இதற்கடுத்து பேட்டிங்கில் இறங்கிய ஆஸ்திரேலியா எளிதாக ரன்களை சேஸ் செய்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

image


Advertisement

1999 இல் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா அப்போது 2 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 1999 உலகக் கோப்பை அணியின் முக்கிய வீரராக ரிக்கி பாண்டிங் இருந்தார். அந்தத் தொடரில் மிகச் சிறப்பாகவும் விளையாடினார் ரிக்கி பாண்டிங். இதனையடுத்து 2003, 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கும் ரிக்கி பாண்டிங் கேப்டனாகி இரண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றினார் என்பது வரலாறு. ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தார் ரிக்கி பாண்டிங்.


Advertisement

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அணிந்திருந்த ஜெர்சியின் புகைப்படத்தைப் பதிவிட்டு "1999 உலகக் கோப்பை நடந்து முடிந்து 21 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை என்னால் நம்பவே முடியவே இல்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் உச்சம் அந்த நாட்கள். உலகக் கோப்பை முடிந்த பின்பு ஆட்டோகிராப், அணியின் பாட்டு என அன்றைய நாள் கடந்ததை மறக்கவே முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement