JUST IN

Advertisement

காஞ்சிபுரம்: முழு முடக்கத்திற்கு முன்பே அழைத்துவரப்பட்ட 1.1 லட்சம் தொழிலாளர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய ஒரு லட்சத்து பத்தாயிரம் தொழிலாளர்களை 19ஆம் தேதிக்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 662 தொழிற்சாலை நிர்வாகங்கள் அழைத்து வந்து தங்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது.


Advertisement

image

முழு முடக்கம் அமல்படுத்தப்படக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய தொழிலாளர்களை ஊரடங்குக்கு முன்பே தொழிற்சாலைகளில் தங்கவைத்து பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அந்த வகையில் முழு முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 662 தொழிற்சாலை நிர்வாகங்கள் அழைத்து வந்து தங்க வைத்து தற்போது பணி வழங்கி வருகின்றன.


Advertisement

தொழிற்சாலைகளில் பணிபுரியும் மேலதிகாரிகள் தினசரி வந்து செல்வதற்கான அனுமதியை சென்னையில் இருக்கக்கூடிய தொழிலாளர் நல வாரியம் ஏற்படுத்தி தருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement