கொரோனா பரவல் எதிரொலி - வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மூடல்

Corona-spread-echo---Vellore-Nethaaji--vegetable-market-close

தொழிலாளர்கள் நலன் கருதி வேலூர் நேதாஜி மார்க்கெட் 22.06.2020 முதல் வரும் 30.06.2020-ம் தேதி வரை மூடப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.


Advertisement

image

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதால் மார்க்கெட்டானது வரும் 22.06.2020 திங்கள் முதல் 30.06.2020 வரை மூடப்படும் என வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் மார்க்கெட்டில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வந்த பின்னரே மார்கெட் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அது வரை பொது மக்களுக்கு காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தற்காலிகமாக பள்ளி வளாகங்களில் வாரச்சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

வேலூர் மாவட்டத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று முதல் உணவகங்கள், பேக்கரிகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து வகை கடைகளும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement