சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் இன்று சதமடித்த வெயில் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.


Advertisement

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

image


Advertisement

தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பொழிவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

Live Chennai: Heat intensity in Tamil Nadu to go up in the next ...


Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி திருத்தணி 106.7, மதுரை விமான நிலையம் 106.1, நுங்கம்பாக்கம் 105.08, மீனம்பாக்கம் 105.2, நாகை 103.8, திருச்சி 103.2, வேலூர் 102.9, மதுரை பரங்கிப்பேட்டை 102.2, தூத்துக்குடி 101.1, காரைக்கால் 100.4 ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement