JUST IN

Advertisement

"ஊரடங்கிற்குள் ஊரடங்கு எனக் காலம் நீள்கிறது" - கமல்ஹாசன் அறிக்கை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு எனக் காலம் நீள்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் " வெளிநாட்டிலிருந்து வருவோர் மூலம் இந்த வியாதி பரவுகிறது எனும் நிலையில், விமான நிலையத்திலேயே அவர்களுக்குப் பரிசோதனைகளைச் செய்திருந்தால் இத்தனை நீண்ட நெடிய ஊரடங்கினை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்காது. உங்களின் அந்த ஒரு தவறுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கிலிருந்து, இப்போதுதான் மெதுவாக மீளத் தொடங்கியிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும் கொரோனா பரிசோதனை குறித்துக் குறிப்பிட்டும் போது கமல்ஹாசன் " சென்னையைத் தவிர்த்துப் பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு? பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனைச் சாவடிகள் அமைத்துத் தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் " 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என அறிவித்திருந்தார் முதல்வர். ஏற்கெனவே சற்றே தளர்த்தப்பட்ட ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு எப்படி மறுபடியும் ஊரடங்கு என்பதைக் கூட யோசிக்காமல் அறிவிக்கும் முதல்வரும், அமைச்சர்களும் தான் நம்மைக் காப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்கள். 'ஊரடங்குக்குள் இன்னொரு ஊரடங்கு' என ஏற்கெனவே அறிவித்து மக்களைப் பயமுறுத்தி, கோயம்பேடு தொற்றினை உருவாக்கினார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு செய்த தவறில் இருந்து கூட பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள். மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

இறுதியாக தன்னுடைய அறிக்கையில் " சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்திலாவது, மக்கள் உள்ளிருக்கும்போது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. இதை ஒரு கட்சியின் தலைவராகக் கேட்கவில்லை. அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்கின்ற, அரசின் உத்தரவுகளை மதிக்கும், ஒரு சாமானியனாகக் கேட்கிறேன். அரசு தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement