முதல்வர் அலுவலகத்தில் 4 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் இன்றும் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,071 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

சென்னையை பொறுத்தளவில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனை தடுக்கும் விதமாக நாளை முதல் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.

இதனிடையே தலைமைச் செயலக முதலமைச்சர் அலுவலகப் பிரிவு முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதனிடையே அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார். முதல்வரின் இரங்கள் செய்தியில், தாமோதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் காலமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததேன். கொரோனா தடுப்புப் பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவரது சேவை மகத்தானது எனக் கூறியிருந்தார்.

image


Advertisement

இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக துணைச் செயலர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு ஓட்டுநருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை சார்ந்தவர்களை தனிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement