சென்னை மாநகராட்சியில் பொதுமுடக்க காலத்தில் இறைச்சிக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள இறைச்சிக்கூடங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழி/ஆடு/மாடு இறைச்சிக்கூடங்கள் மற்றும் மீன் கடைகளை ஆகியவை முழுமையாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்