'யாத்திரையை அனுமதித்தால் பகவான் ஜெகன்னாதரே மன்னிக்க மாட்டார்': உச்சநீதிமன்ற நீதிபதிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையை கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Advertisement

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை வருகிற 23 ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா மூலம் கொரோனா பரவும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

image


Advertisement

இயந்திரம் உதவியுடன் தேர் இழுக்கப்படும் என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஒடிஷா அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.ஆனால் இதை ஏற்காத உச்ச நீதிமன்றம் இந்தாண்டு ரத யாத்திரை நடத்த தடை விதித்தது. தற்போதைய சூழலில் ரத யாத்திரை நடத்த அனுமதித்தால் வைரஸ் பரவலுக்கு அனுமதி தந்தது போல் ஆகிவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

image

இந்த நேரத்தில் தேர்த்திருவிழா நடத்தாவிட்டால் அல்ல, நடத்தினால்தான் பகவான் ஜெகன்னாதர் நம்மை மன்னிக்க மாட்டார் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement