இரண்டாவது முறையாக கொரோனா வந்தால் மரணிக்க வாய்ப்பு- எச்சரிக்கும் மருத்துவர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவருக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் கூட நிகழலாம் என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்திலேயே இதற்கான சில உதாரணங்கள் இருக்கும் நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
 
image
 
பொதுவாகவே ஒரு வைரஸ் மனிதர்களை முதல் முறை தாக்கும் போது நம் உடலில் உருவாகும் இயல்பான நோய் எதிர்ப்புத்திறன், அடுத்தடுத்த முறை நம்மைக் காக்கும் என்ற கருத்து மருத்துவத் துறை நிபுணர்கள் பலரால் கூட தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இதனைப் பொய்யாக்கி மருத்துவ உலகை அதிர வைக்கிறது. தொற்று உருவான சீனாவில் குணமடைந்தவர்கள் சிலருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதாக வந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அங்கு ஒரு முறை தொற்று ஏற்பட்டு நீங்கியவர்களில் சுமார் 5000 பேருக்கு இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டதாகவும், கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளில் இதே போன்ற தரவுகள் இருக்கின்றன.
 
image
 
வெளிநாடுகளின் சீதோஷன நிலைக்கு அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆறுதல் வார்த்தைகள் ஒலித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்திலேயே இதற்கான தரவுகள் உள்ளன என்பது மேலும் ஒரு அதிர்ச்சி. ஓமந்தூரார் மருத்துவமனையில் 19 நாட்கள் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து திரும்பிய இளைஞர் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தியைக் கடந்த ஜூன் 5 ஆம் நீதி முதல் முறையாக புதிய தலைமுறையில் பதிவு செய்திருந்தோம். இதே போல் மார்ச் மாதம் முதல் களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஏராளமான உயிர்களைக் காத்த செவிலியைக் கண்காணிப்பாளர் தங்க லட்சுமி இரண்டாம் முறையாகத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த செய்தியையும் ஜூன் 14 ஆம் தேதி பதிவு செய்திருந்தோம்.
 
image
 
இந்நிலையில் குணமடைந்தவர்களுக்கு இரண்டாம் முறை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கட்டாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கோவிட் 19 வைரஸின் தன்மைகள் எதையுமே அறுதியிட்டுக் கூற இயலா சூழலில் , ஒருமுறை தொற்று ஏற்பட்டு நீக்கினாலும் மீண்டும் தொற்று ஏற்படா வண்ணம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
வெகு சிலருக்கு வேண்டுமானால் நோய் எதிர்ப்புத் திறன் காரணமாக மறுமுறை வைரஸால் அறிகுறிகள் ஏதும் தென்படாமல் இருக்கலாம். ஆனால் , நீரிழிவு, இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள், புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் , இரத்த சோகை உடையோர் என இணை நோய்கள் இருப்போருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
image
 
கொரோனாவின் வீரியம் இவ்வளவு காலம் தான் இருக்கும் என்ற உறுதியான எந்த ஒரு தரவுகளும் வரையறுக்கப்படாத நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவராக இருந்தாலும் ஒரு போதும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதே மருத்துவர்களின் அழுத்தமான அறிவுரையாக உள்ளது.
loading...

Advertisement

Advertisement

Advertisement