செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 842 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,624 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 48 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
செங்கல்பட்டு - 162, கோவை - 2, கடலூர் - 77, தருமபுரி - 10, திண்டுக்கல் - 15, கள்ளக்குறிச்சி - 16, காஞ்சிபுரம் - 61, கன்னியாகுமரி - 9, கரூர் - 8, கிருஷ்ணகிரி - 3, மதுரை - 27, நாகை - 13, நாமக்கல் - 2, நீலகிரி - 5, 2, புதுகோட்டை - 9, ராமநாதபுரம் - 51, ராணிப்பேட்டை - 70, சேலம் - 25, சிவகங்கை - 12, தென்காசி - 5, தஞ்சை - 12, தேனி - 3, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 90, திருவண்ணாமலை - 49, திருவாரூர் - 15, தூத்துக்குடி - 50, நெல்லை - 15, திருச்சி - 8, வேலூர் - 15, விழுப்புரம் - 20, விருதுநகர் - 2 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 16, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், ரயில்வே கண்காணிப்பிலிருந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்