சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள் : செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் நெரிசல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில், சென்னையிலிருந்து வெளியேறும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

image


Advertisement

இதையடுத்து வண்டலுார், பரனுார், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களையும் கடுமையாக சோதிக்கின்றனர். இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம் இல்லாத, தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

image

இதற்கிடையே சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளன. இதனால் செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. பெரும்பாலானோர் கணிசமான தொகையைக் கொடுத்து இருசக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை செல்கின்றனர். பலரும் போலீசார் சோதனையை கண்டதும் பாதி வழியிலேயே திரும்பி செல்கின்றனர். இன்று மட்டும் காலையில் இருந்து தற்போது வரை 50க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

loading...

Advertisement

Advertisement

Advertisement