"தியாகத்துக்கு வீர வணக்கங்கள்"- விராட் கோலி, ரோகித் சர்மா இரங்கல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.


Advertisement

image

இதனையடுத்து இந்திய வீரர்களின் மரணம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பதிவில் "நாட்டை காப்பாற்றுவதற்காக கல்வான் பள்ளத்தாக்கில் தங்களுடைய இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு வீர வணக்கமும் மரியாதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தன்னைப் பற்றி கவலைப்படாமல் வீரமாக பணியாற்றும் ராணுவ வீரருக்கு ஈடு இணையே இல்லை. அவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய அனுதாபங்கள். இந்நேரத்தில் எங்களுடைய பிரார்த்தனைகள் அவர்களுக்கு துணை நிற்கும் என நம்புகிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய பதிவில் "நாட்டை காப்பதற்காக எல்லையில் உயிரை விட்ட உண்மையான கதாநாயகர்களுக்கு என்னுடைய வீர வணக்கங்கள். அவர்களின் குடும்பத்தாருக்கு கடவுள் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்" என ட்விட்டரில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement