JUST IN

Advertisement

“வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்”-பிரதீப் கவுர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

14 நாட்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறியுள்ளார்.


Advertisement

ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவுக்கு துணை இயக்குநராக பிரதீப் கவுர் பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக அரசு கொரோனா தொற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைக் குழுவிற்கு அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை, மருத்துவ அறிவுரைகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

image


Advertisement

சமீபத்தில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கச் செய்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட ஒரு பதிவில், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டுமென்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்றனர். ஆரோக்யமான வாழ்க்கை முறையே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சில எளிமையான விஷயங்களை கடைபிடித்தால் போதும், கொரோனா மட்டுமின்றி வேறு நோய் தாக்காமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

image

தினமும் 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகள், புரதம் நிறைந்த உணவு, முழு தானியங்கள் மற்றும் மிதமான அளவு பால் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும், நடைப்பயிற்சி, யோகா, வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி இப்படி ஏதேனும் ஒன்றை செய்து உடலை ஆக்டீவாக வைத்திருக்க வேண்டும். வெளியிலும் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் தனிமனித இடைவெளி அவசியம்.


Advertisement

 

"அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்க"- ஸ்டாலின் !

 

ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் நாமாகவே மருந்து உட்கொள்ளக்கூடாது. மேலும் விட்டமின் சி மற்றும் டி கிடைக்கும் உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உணவுப்பொருட்களில் சரியாக கிடைக்கவில்லை எனத் தெரிந்தால் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்று பல தகலகளை அளித்திருந்தார்.

image

இந்நிலையில் பிரதீப் கவுர், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். 19 ஆம் தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தொடங்க உள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதீப் பவுர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றுவதற்கான அதிக ஆபத்து இருப்பதால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் சமூகத்தை காப்பதற்காக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement