நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு: எல்லைகளை கண்காணிக்கும் ராணுவம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யூசிலாந்தில் 24 நாட்களுக்கு பிறகு இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டு எல்லைகளை ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


Advertisement

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்தில் கடந்த வாரம் கடைசி கொரோனா நோயாளியும் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நாடு கொரோனாவில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

New Zealand is no longer coronavirus-free, 2 fresh cases detected


Advertisement

இதனையடுதத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்து கொரோனாவை இப்போதைக்கு வென்றுவிட்டோம், ஆனால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துதல் என்பது தொடர்ச்சியான முயற்சி என கூறினார். இந்நிலையில் 24 நாட்களுக்கு பிறகு அங்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இங்கிலாந்து நாட்டில் இருந்து டோஹா, பிரிஸ்பேன் வழியாக கடந்த 7-ந் தேதி நியூசிலாந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 30 வயது கடந்தவர், மற்றவர் 40 வயது கடந்தவர். அவர்கள் ஆக்லாந்தில் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

New Zealand Celebrates End of Coronavirus Restrictions | Voice of ...

திடீரென இறந்துபோன தங்களது பெற்றோரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்தனர். அதன்பேரில் அவர்களுக்கு நியூசிலாந்து அரசு அனுமதி அளித்தது. அவர்கள் 13-ந் தேதி வெலிங்டன் சென்றனர். அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தவில்லை. தனி வாகனத்தில்தான் வெலிங்டன் பயணம் மேற்கொண்டனர். அங்கு ஒரே ஒரு குடும்ப உறுப்பினருடன் தங்கி உள்ளனர். இந்நிலையில் அந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


Advertisement

இப்போது நியூசிலாந்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண்கள் 2 பேரையும் சேர்த்து நியூசிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக நீடிக்கிறது. மேலும் நியூசிலாந்தின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்க அந்நாட்டு ராணுவும் முடிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement