உணவு பரிமாறுவதில் பிரச்னை.. மணப்பெண்ணின் 9வயது தம்பி கொலை: மணமகனுக்கு போலீஸ் வலைவீச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னையில் மணமகளின் 9 வயது சகோதரனை கழுத்தை நெறித்து மணமகன் கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

உத்திரப்பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே ஃபரூக்காபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது உணவு பறிமாறும்போது ஏற்பட்ட பிரச்னையில் மாப்பிள்ளை மணமகளின் சகோதரனை கொலை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து உயிரிழந்தவரின் அண்ணன் புனித்(19) கூறுகையில், “இரவு 8:30 மணிக்கு மணமகன் வந்தார்.. பராத் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு நாங்கள் அவர்களுக்கு தின்பண்டங்கள் மற்றும் தண்ணீரை வழங்கினோம். ஆனால் மணமகன் மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உணவு ஏற்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். அப்போது எங்கள் வீட்டு பெரியவர்கள் தலையிட்டபோது, அவர்கள் ஒரு நாட்டு துப்பாக்கியால் என் தாய் மாமா ராம் குமாரை நோக்கி சுட்டனர். மனோஜ் மற்றும் அவரது நண்பர்களுக்கு தண்ணீர் பரிமாறிக் கொண்டிருந்த எனது தம்பி பிரன்ஷு 9, அவர்களால் ஒரு எஸ்யூவியில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் காரில் தப்பி ஓடும்போது 3 பெண்கள் மீது கார் மோதியதில் அவர்கள் படுகாயமடைந்தனர். பிரன்ஷுவுடன் திரும்ப வருமாறு மனோஜ்க்கு பலமுறை செல்போனில் அழைத்தோம். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். அதிகாலை 3 மணியளவில், அவர் எனது சகோதரரின் உடலை கிராமத்தில் போட்டுவிட்டு மீண்டும் தப்பி ஓடிவிட்டார். பிரன்ஷு கொலை செய்யப்பட்டார். அவனது கழுத்தில் நெறிக்கப்பட்ட வடு இருந்தது. முகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.” எனத் தெரிவித்தார்.


Advertisement

image

படுகாயமடைந்தவர்கள் விமலா(50), மித்லேஷ்(35), சப்னா(17) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஃபரூக்காபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மித்லேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மணமகளின் தந்தை ராம்பால் ஜாதவ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து காமாய்கஞ்சின் வட்ட அதிகாரி ராஜ்வீர்சிங் கவுர் கூறுகையில், “ஆரம்ப விசாரணையில் இரு தரப்பிலிருந்தும் ஆண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த சண்டையும் நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட மணமகன் மூன்று பெண்கள் மீது காரால் மோதியுள்ளார். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிறுவனை மணமகன் கழுத்தை நெறித்து கொலை செய்தாரா என்பதை அறிக்கை தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.


Advertisement

குற்றம் சாட்டப்பட்ட மணமகனையும், அவரது உறவினர்களையும் போலீசார் தேடிக்கொண்டிருக்கின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement