இன்றும் விலை உயர்வு: கடந்த 11 நாட்களில் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 11வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.32, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.47 உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement

ஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. கடந்த 11 நாட்களாக ஏறு முகத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைய தினம் தினம் அதிகரிப்பது சாமானிய மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 80.86 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய விலையை விட 49 காசுகள் அதிகம். அதேபோல் டீசல் விலை 73.69 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 52 காசுகள் அதிகமாகும். கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.32, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.47 உயர்த்தப்பட்டுள்ளது.

image

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் பல கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். முன்னதாக பெட்ரோல் டீசல் விலையை குறைத்து, கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என, பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

‘மும்பையில் 451 கொரோனா மரணங்கள் கணக்கு காட்டப்படவில்லை’ : அதிர்ச்சியூட்டும் புகார்

loading...

Advertisement

Advertisement

Advertisement