JUST IN

Advertisement

‘மும்பையில் 451 கொரோனா மரணங்கள் கணக்கு காட்டப்படவில்லை’ : அதிர்ச்சியூட்டும் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிர மாநிலத்தில் 451 கொரோனா நோயாளிகளின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது.


Advertisement

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 343,091 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகமான பாதிப்பை பெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மும்பையில் 59,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் மட்டும் 2,250 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் 1.10 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த இறப்பு 4,128 ஆக பதிவாகியுள்ளது. இந்த விவரங்களை அம்மாநில தலைமை செயலாளர் அஜோய் மேத்தா தெரிவித்துள்ளார். 

image


Advertisement

இந்நிலையில், கொரோனா நோயாளின் மரணம் குறித்து அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் குறைந்தது 451 கொரோனா நோயாளிகளின் மரணங்கள் மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி) பதிவு செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இது தொடர்பான செய்தியை கண்டறிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

image

மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள், "இது உண்மைகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியா" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு கொரோனா நோயாளி இறந்தவுடன், அம் மரணத்தை உறுதிப்படுத்தும் விதிமுறைகள் நீண்ட கால அளவை எடுத்துக் கொள்கின்றன. ஆகவே பல நாட்கள் ஆகலாம். அதேபோல் ஒரு கொரோனா மரணம் பதிவு செய்யப்படாமல் போக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக 451 பேர்களின் மரணங்கள் பதியப்பட்டாமல் விடுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கொரோனா நோயாளி மருத்துவமனையில் இறந்தவுடன், அம்மருத்துவமனை 48 மணி நேரத்திற்குள் தகவல்களை பதிவேற்ற வேண்டும். மேலும் பி.எம்.சியின் தொற்றுநோயியல் துறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அப்படி இருந்தும் இது விடுப்பட்டுள்ளது. இது குறித்து லிலாவதி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் வி ரவிசங்கர், "நாங்கள் விரைவாக புகாரளிக்க முயற்சிக்கிறோம். மரணம் குறித்த தகவல்கள் ஒரே நேரத்தில் காவல்துறைக்கும் பி.எம்.சிக்கும் தெரிவிப்பது முக்கியம் ”என்று கூறினார்.

image

முன்னதாக, டெல்லி மற்றும் தமிழகத்திலும் கொரோனா தொடர்பான மரணங்கள் முழுமையாக அறிவிக்கப்படுவதில்லை என்றும் மாநகராட்சி வெளியிடும் மரணம் குறித்த அறிவிப்புக்கும் சுகாதார துறையினர் வெளியிடும் அறிவிப்புக்கும் பெரிய அளவில் முரண்பாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

 

‘கொரோனா உயிரிழப்புகளை குறைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து’: லண்டன் ஆராய்ச்சியாளர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement