“இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களை அனுமதிக்கமாட்டோம்”: புதுச்சேரி முதல்வர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இருந்து இ-பாஸ் வாங்கிக் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அம்மாநில முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1438 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த 49 பேர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 528 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்த வருகின்ற 19 ஆம் தேதியில் இருந்து மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் முழுமையாக முடங்க உள்ளன. 

image

இந்நிலையில், புதுச்சேரியின் முதல்வர் நாராயண சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இருந்து இ- பாஸ் வாங்கிக் கொண்டு வருபவர்களாக இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டமாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.


Advertisement

 

image

சென்னையில் இருந்து வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மாட்டடோம் அப்படி வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்ப்படுவார்கள். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவியை தவிர வேறு யார் வந்தாலும் சரி ஈ பாஸ் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் விடமாட்டோம் என நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் தான் புதுச்சேரியில் நோய்த்தொற்று ஏற்படுகின்றது அதனால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இன்று நடந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

திருமணத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement