திருமணத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப் பிரதேசம் போபால் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட 85 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement

மத்தியப் பிரதேசம் போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு இளம் ஜோடி சுமார் 85 விருந்தினர்கள் பங்கேற்புடன் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விருந்தினர் ஒருவர் குருகிராமிலிருந்து வந்துள்ளார். திருமணத்தில் கலந்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், அந்த நபர் கொரோனா பரிசோனை செய்து கொண்டுள்ளார். இவரது மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் திருமண நாளில்தான் வந்துள்ளது. 

image


Advertisement

அவரை தனிமைப்படுத்துவதற்காக நடந்த விசாரணையில் அவர் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட தகவல் கிடைத்தது. அதனையொட்டி மண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக சத்தர்பூர் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த வளர்ச்சியைப் பற்றி அறிந்தபோது, ஒவ்வொரு திருமண விருந்தினரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய அவர் முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் தேடலுக்குப் பிறகு மொத்தம் 85 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் புதுமணத் தம்பதியான ஜோடியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

image

இது குறித்து மணமகன் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசுகையில், “திருமணம் நிறுத்தப்பட்டுவிடும் என்று நான் நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.


Advertisement

 

 பள்ளியில் பாடம் நடத்த இலவசமாக 26 டிவிகள் : உதவிய முன்னாள் மாணவருக்கு குவியும் பாராட்டு

loading...

Advertisement

Advertisement

Advertisement