பள்ளியில் பாடம் நடத்த இலவசமாக 26 டிவிகள் : உதவிய முன்னாள் மாணவருக்கு குவியும் பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு 26 தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி தந்துள்ளார்.


Advertisement

image

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே சலவரா உயர்நிலைப் பள்ளியில் ராஜேஷ் என்றவர் 2006 ஆம் ஆண்டு படித்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் சொந்தமாக கப்பல் கம்பெனியை நடத்தி வருகிறார். தான் படித்த பள்ளியின் தற்போது நிலைமை குறித்து அறிந்த இவர், தங்களின் சொந்த செலவில் இப்பள்ளிக்கு பாடம் நடத்துவதற்காக 26 தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார். இவரது செயலை பலரும் இப்போது பாராட்டி வருகின்றனர். அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர் உதவ முன்வந்திருப்பதை அனைவரும் வாழ்த்தியுள்ளனர்.


Advertisement

 

image

இது குறித்து ராஜேஷின் தந்தை மோஹனன், “என் மகன் இந்தப் பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்துள்ளார். அவர்களின் சிரமம் குறித்தப் பதிவைக் கண்டு உதவ ஆசைப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார். இந்தப் பள்ளிக்கு ராஜேஷின் தாய் விஜயலஷ்மியும் வந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அனைத்து தொலைக்காட்சி பெட்டியையும் பள்ளியின் முதல்வர் விஜயராகவனிடம் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேன் சுதாகரன் முன்னிலையில் ஒப்படைத்தனர்.


Advertisement

 

யூடியூப் லைவ் மூலம் வெளியாகும் ‘ஹானர் 9ஏ’..!

loading...

Advertisement

Advertisement

Advertisement