கிராமப்புற, நகர்ப்புற சாலைகளுக்கு சீல்.. முழு கண்காணிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

சென்னையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு வருகின்ற 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

image


Advertisement

சென்னையில் இருந்து தற்போது வாகனங்கள் அதிக அளவில் பிற மாவட்டங்களை நோக்கி படையெடுக்கின்றன. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் என பிறமாவட்டங்களுக்கு செல்ல ராணிப்பேட்டை மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

image

ஈரோடு : புத்தக திருவிழா ரத்து


Advertisement

இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 25 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கிராமப்புற வழியாகவும் பொதுமக்கள் உள்ளே வராத வகையில் கிராமப்புற நகர்ப்புற சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு தற்போது கூடுதலாக இரண்டு துணை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

image

ஒரு சோதனைச் சாவடிக்கு 20 காவலர்கள் விகிதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 காவலர்களை பணியில் அமர்த்தி சுழற்சிமுறையில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement