JUST IN

Advertisement

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பும்.. உயிரிழப்பும்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 2,786 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,744ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 178 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்தமாக 4,128 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,500ஆக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சத்தை தாண்டியுள்ளது.


Advertisement

image

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பகுதிகளில் ஜுன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகளிலும்) எந்தவித தளர்வும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

அதே நேரத்தில் டெல்லி, குஜராத் மாநிலங்களிலும் கொரோனாவின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இதுவரை பொதுமுடக்கத்தை நீட்டிக்கும் அறிவிப்பு ஏதும் அங்கு வெளியாகவில்லை. பொதுமுடக்கத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என குஜராத் முதல்வர் சமீபத்தில் தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் சூழலில் மக்களும் கொரோனாவோடு வாழ்வதற்கு பழகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

image


Advertisement

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 30ம் தேதியோடு ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனாவின் வேகமும் இப்போதுதான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

துக்கம் விசாரிக்க ஒரே லாரியில் 90 பேர் பயணம் - மடக்கி பிடித்து அபராதம் வசூல்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement