JUST IN

Advertisement

கொரோனாவுக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை - பிரப்தீப் கவுர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவுக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்று மருத்து நிபுணர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

 


Advertisement

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அப்படி யாரேனும் கொரோனாவை சரி செய்ய முடியும் என்று சொன்னால், நிச்சயமாக அது சோதனை முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். எல்லா அலோபதி மருந்துகளும் சந்தைக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற சோதனை செய்யப்படும்.

கொரோனாவை கட்டுப்பட்டுத்த இதுவரை நிரூபிக்கப்பட்டவை என்றால் அது மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளிதான். மற்ற எதற்கும் இதுவரை ஆதாரம் இல்லை” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், கொரோனாவை தங்களால் சரி செய்ய முடியும் என்றும் பலர் கூறிவரும் நிலையில் மருத்துவர் பிரப்தீப் கவுர் இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement