JUST IN

Advertisement

”முன்னாள் காதலியை குற்றம் சாட்டுவீர்களா?”: சுஷாந்த் இறப்பு குறித்து சோனம் கபூர் காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தது தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து நடிகை சோனம் கபூர் தனது காட்டமான கருத்தை முன் வைத்துள்ளார்.


Advertisement

எம்.எஸ். தோனியின் வாழ்கை வரலாறு உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இவர் நேற்று மும்பையின் பாந்த்ரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்த செய்தி திரை உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட பலரும் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங்கிற்கு நெருக்கமானவர்கள் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு இறப்பிற்கு, அவரது முன்னாள் காதலி, நண்பர்களின் அலட்சியத்தன்மை உள்ளிட்டவைதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காட்டமான பதிலை முன்வைத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ ஒருவர் இறந்ததற்கு அவரது காதலி, முன்னாள் காதலி, குடும்பத்தினர்கள், உறவினர்களை குற்றம் சாட்டுவது அறியாமைத்தனத்தைக் காட்டுகிறது ”என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement