சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் 6 வருடங்கள் காதலில் இருந்து பின்பு பிரிந்த அவரது முன்னாள் காதலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எஸ் தோனி படம் மூலம் பிரபலமடைந்த சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை கேட்ட பிரதமர் உட்பட பல தலைவர்களும், பல திரைப் பிரபலங்கள் அவரது மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் சுஷாந்துடன் காதலில் இருந்த நடிகை அங்கிதா லோகண்டே அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் “ கடவுளானவர் உங்களது வாழ்க்கையில் இருந்து சில மனிதர்களை நீக்குகிறார் என்றால், அவர் உங்களுடன் நடத்தாத உரையாடலை கடவுள் கேட்டிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சரியாக 4.30 மணியளவில் இதனைப் பதிவையிட்ட அவர் 6 மணி அளவில் அதை நீக்கினார்.
@MumbaiPolice
Just after the news came of death, this story was being posted by Ankita Lokhande (Sushant's ex Girlfriend) on Instagram.
Isn't this questionable?
This screen shot was taken by me around 4.15pm today and at 6pm around this story was deleted!#sushantsinghrajpoot pic.twitter.com/kM0lnLx8ZJ— Saad Inshrah (@Saad_Inshrah) June 14, 2020Advertisement
சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் அங்கிதாவும் “ பவித்ரா ரிஷ்டா” என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் காதலில் இருந்த இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்தனர். அப்போது சுஷாந்திற்கு அங்கிதா ட்விட்டரில் ஒரு பதிவை இட்டார். அதில் “ நீ தனியாக இருப்பதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. நான் உன் இதயத்திலும் உனது வாழ்க்கையிலும் இருக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விக்கி ஜெய்ன் என்பவருடன் அங்கிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக அங்கிதாவும் தனது சமூக வலைதளங்களில் ஒரு மோதிர புகைப்படத்தை பதிவிட்டார். ஆனால் இந்த செய்தியை இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?