மதுரையில் நள்ளிரவு நேரங்களில் கடப்பாரை, கம்பிகளுடன் பூட்டிக்கிடந்த வீடுகளை கொள்ளையர்கள் உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை பணங்காடிப் பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு கடப்பாரை கம்பிகளுடன் மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடிக்கும் பொருட்டு ஒரு வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அருகாமையில் உள்ள வீட்டினர் மின் விளக்குகளை போட்டுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த மர்ம நபர்கள் நேற்று ஒரே நாளில் மட்டும் பூட்டிக்கிடந்த மூன்று வீடுகளில் கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை காவலர்கள் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அதில் பதிவான ஒரு சிசிடிவி காட்சியில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மர்ம நபர்களை அடையாளம் கண்ட போலீசார் தற்போது அவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!