4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் - தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முழுமையாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30வரை முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் என்னென்ன கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுளன என்பதை பார்க்கலாம்.


Advertisement

image

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முழுமையாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30வரை முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

image


சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கும்  ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்த 12 நாட்களில் சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்ப்பட்டப் பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement