நெருக்கமாக இருந்த காதலர்கள் - தவறி பார்த்த சிறுவன் கொடூர முறையில் கொலை..!

Lovers-who-were-close---the-brutally-murdered-boy

காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை, கல்லூரி மாணவன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


Advertisement

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதனையடுத்து சிறுவனின் சடலம், கைரேகை மற்றும் முக்கியத் தடயங்களை கைப்பற்றிய போலீசார் கொலை தொடர்பான விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனை அஜித்தும் அவரது காதலியும் கொன்றது அம்பலமானது.

image


Advertisement

விசாரணையில் அஜித் கூறியதாவது “ பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நான், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தேன். நானும் என் காதலியும் புத்தூர்பள்ளபாளையம் குளத்தில் சந்தித்து பேசினோம். இருவரும் மிக நெருக்கமாகவும் இருந்தோம். அப்போது குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் எங்களைப் பார்த்து விட்டான். அவனது வீடு எனது காதலி வீட்டின் அருகில் உள்ளது. அதனால் அங்கு நடந்ததை அவன் காதலி வீட்டில் சொல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. எங்கே அவன் வீட்டில் சொல்லிவிடுவான் என்ற பயத்தில் நாங்கள் இருவரும் குளத்தின் அருகே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து அவனை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்” என்று அஜித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

image

 


Advertisement

இதனையடுத்து, சிறுவனை கொலை செய்த கல்லூரி மாணவனை ஊத்துக்குளி போலீசார் கைது செய்து ஊத்துக்குளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த பெண் மைனர் என்பதால்,  கைது செய்த போலீசார்  கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement