தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கிய வெயில்: 10 இடங்களில் சதம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பம் தணிந்திருந்த நிலையில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.


Advertisement

தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பொழிவும் இருந்து வருகிறது.

Heatwave to spare Chennai, Tamil Nadu to remain hot | Skymet ...


Advertisement

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் 106.16, திருத்தணி 103.64, புதுவை 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.84, திருச்சி 101.66, தூத்துக்குடி 101.3, சென்னை நுங்கம்பாக்கம் 101.12, மதுரை கடலூர் 100.7, நாகை 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது.

loading...

Advertisement

Advertisement

Advertisement