கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தை கடத்தல் - திருப்பூர் தம்பதி கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

நேற்று மாலை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம்- செல்வராணி, தம்பதியர் தங்களது 8 மாத இரட்டை ஆண் குழந்தைகளுக்கு  பிறப்பு சான்றிதழ்கள் வாங்குவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது முன்பின்  அறிமுகமில்லாத இளம்பெண் ஒருவர் தம்பதியினருடன் பேச்சுக் கொடுத்ததாகத் தெரிகிறது. முதலில் குழந்தையின்  எடையை  பரிசோதிக்க வேண்டும் எனக் கூறிய அந்தப்பெண்  இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு திடீரென தலைமறைவு ஆகியுள்ளார்.  நீண்ட நேரமாகியும் குழந்தை வராததை கண்டு  அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள்  ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

image

கொரோனா பிடியில் இந்தியா: 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு!


Advertisement

புகாரின் அடிப்படையில்  தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குழந்தையை கடத்தியது  திருப்பூரை சேர்ந்த  விக்னேஷ்- பிரபாவதி தம்பதி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விக்னேஷ் பிரபாவதிவை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  குழந்தையை மீட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement