JUST IN

Advertisement

அம்பத்தூர்: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அம்பத்தூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபர், கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. இதனிடையே கொரோனா வார்டில், சிகிச்சை பெறும் சிலர் அங்கிருந்து தப்பியோடும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் அம்பத்தூர் சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டில் கே.கே. நகரை சேர்ந்த 40 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார்.

image


Advertisement

செங்கல்பட்டு: இ பாஸ் இல்லாத இருசக்கர வாகனங்கள்..பறிமுதல் நடவடிக்கையில் போலீசார்

ஆனால் சிகிச்சை முழுவதுமாக குணமாவதற்கு முன்பாகவே யாருக்கும் தெரியாமல் அவர் அங்கிருந்து தப்பி கே.கே நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர், தப்பிச் சென்ற அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் சிகிச்சைகாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement