சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
இது குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "97 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் காய்ச்சல், இருமல், லேசான மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகளுடன் கடந்த மே 30-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணமூர்த்திக்கு உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்டவையும் இருந்தன. சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்ததால் காய்ச்சல் குறையத் தொடங்கியது. தொடர்ந்து மூச்சுத்திணறலில் இருந்தும் விடுபட்டார். அவரின் சுவாசம் மேம்பட்டது.
நோயாளி டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு தனது சொந்த உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். இதையடுத்து கொரோனோ பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் கிருஷ்ணமூர்த்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களுக்கான மூத்த ஆலோசகர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறுகையில் "மக்கள் நம்பிக்கையை இழக்க கூடாது. மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பயப்படக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
97 வயதான இந்த நபர் தமிழகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிய மிக வயதான நோயாளி என்றும் வைரஸிலிருந்து மீண்ட நாட்டின் இரண்டாவது வயதான நபர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, திண்டுகல்லைச் சேர்ந்த 95 வயது பெண் ஒருவர் கருர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து குணமடைந்தார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!