பழங்குடி சாதிச் சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு - ஆர்டிஓவுக்கு 50 ஆயிரம் அபராதம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பழங்குடியினர் என மாநிலக் குழு உறுதி செய்த பின்னரும் சாதிச் சான்றிதழ் வழங்காத ஆர்டி.ஓவுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

தர்மபுரி மாவட்டம் சின்னகாண அள்ளியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது குழந்தைகளுக்குப் பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தர்மபுரி வருவாய்க் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில அளவிலான கூர்நோக்கு குழுவுக்கு அவர் விண்ணப்பித்தபோது பழங்குடியினர் என உறுதி செய்ததுடன் சான்றிதழை வழங்க உத்தரவிடப்பட்டது.

image


Advertisement

ஆனால் அப்படியும் சான்றிதழ் வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோ இன்று தீர்ப்பளித்தனர். அதில் "பழங்குடியினர் என மாநிலக் குழு உறுதி செய்த பின்னரும் சாதிச் சான்றிதழ் வழங்காத ஆர்டி.ஓவுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவர்களால் அரசின் நற்பெயர் கெடுகிறது. இவர்களைப் போன்ற அதிகாரிகளை அரசு காப்பாற்றக் கூடாது" என்றனர்.

மேலும் ஜூன் 15 ஆம் தேதியன்று சாதிச் சான்றிதழோடு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ காணொலியில் ஆஜராக உத்தரவிட்டனர். முன்னர் இருந்த ஆர்.டி.ஓ. தேன்மொழி, தற்போதைய ஆர்.டி.ஓ. தணிகாசலம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரை செய்யக்கூடாது என அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை கொரோனா நிவாரண நிதிக்குச் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement