பத்தாம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

Auto-driver-of-10th-grade-student-arrested-in-Bokso

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வலுக் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மயிலம் அருகே உள்ள கோயிலில் வைத்து மாணவியைத் திருமணமும் செய்துள்ளார்.

image


Advertisement

ஆனால் அந்த மாணவி, தன் திருமணத்தை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பெற்றோர்கள் அவரைப் புதுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைத் தெரிவித்துள்ளனர்.

image


இதனையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வெங்கடேஷை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement