“பசியுடன் திரியும் கால்நடைகளுக்கு உணவளியுங்கள்” - ஷிகர் தவான் வேண்டுகோள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குடும்பத்துடன் சாலையில் திரிந்த மாடுகளுக்கு உணவளித்தார்.


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் அண்மைக்காலமாக பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

image


Advertisement

இந்நிலையில் தனது குடும்பத்துடன் சாலையில் திரியும் மாடுகளுக்கு ஷிகர் தவான் குடும்பத்துடன் உணவளித்த வீடியோவை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தவானும், அவரது மகனும் மாடுகளுக்குக் காய்கறிகளை வழங்குகின்றனர். வீடியோவுடன் கருத்தையும் பதிவிட்டுள்ள தவான், “ஒரு தந்தையாக எனது மகனுக்கு வாழ்க்கையில் உண்மையான மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துவதையும் கற்றுக்கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறேன். image

குறிப்பாக யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். பசியுடன் இருக்கும் கால்நடைகளுக்கு இந்தக் கடினமான நேரத்தில் உணவளியுங்கள். இந்த முக்கிய பாடத்தை எனது மகனுக்குக் கற்றுக்கொடுப்பதில் பெருமை அடைகிறேன். அனைவரும் அவர்களால் முடிந்தவரை உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமுடக்கம் எதிரொலி: 27 மாவட்டங்களில் உயர்ந்த நிலத்தடி நீர் மட்டம் !

loading...

Advertisement

Advertisement

Advertisement